உள்ளடக்கத்துக்குச் செல்

அனடோலி சிமோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனடோலி டேவிதோவிச் சிமோன் (Anatoly Davydovich Zimon) மாசுகோ மாநில தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் ஒரு கெளரவ பேராசிரியராக இருந்தார். இவர் வாழ்ந்த காலம் 1924 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் நாள் முதல் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் நாள் வரையுள்ள காலமாகும். தொழில்நுட்ப அறிவியல் முனைவர், உருசியாவின் கௌரவ அறிவியல் அறிஞர், பன்னாட்டு சூழலியல் கல்விக் கழகத்தின் கற்பிப்பாளர் மற்றும் வாழ்க்கை பாதுகாப்பு அமைப்பின் முதுபெரும் தலைவர் போன்ற சிறப்புகளும் இவருக்கு உண்டு. இரண்டாம் உலகப்போரில் முதுபெரும் அனுபவம் கொண்டவர், மற்றும் ஓர் ஓய்வு பெற்ற படைத்தலைவர் என்றும் சிமோன் கருதப்படுகிறார் [1].

ஒட்டும் வேதியியல் துறையில் ஒரு புதிய போக்கை இவர் நியாயப்படுத்தி உருவாக்கினார். இத்துறை ஒரு பெரிய அறிவியல் மற்றும் நடைமுறை மதிப்பைக் கொண்டுள்ளது. மேலும் இத்துறை உருசியாவிலும் வெளிநாட்டிலும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்காவில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டுரைகள் உட்பட இவரின் ஏழு தனிக்கட்டுரைகள் இத்துறையின் கலைக்களஞ்சியமாக திகழ்ந்தன. சப்பான் மற்றும் செருமனியில் வெளியிடப்பட்ட தூய்மையாக்கல் என்ற புத்தகத்தில் தனது சொந்த ஆராய்ச்சியின் அடிப்படைகளையே இவர் எழுதியிருந்தார். செர்னோபில் பேரழிவுக்குப் பிறகு அந்நிகழ்வை ஆய்வு செய்தே தூய்மைப்படுத்தல் கோட்பாடு நடைமுறையை இவர் முன்வைக்கிறார். ஐந்து விஞ்ஞானப் புத்தகங்களை இவர் வெளியிட்டுள்ளார். அவற்றில் இயற்பியல் மற்றும் கூழ்ம வேதியியலில் முதல் முறையாக எழுதப்பட்ட இயற்பியல் மற்றும் கூழ்ம வேதியியல் பாடப்புத்தகங்கள் ஆகும். 1967-2001 ஆம் ஆண்டுகளில் இவர் 26 புத்தகங்களை வெளியிட்டார். சமீபத்திய மறு வெளியீட்டின் படி இது 37 தொகுதிகளையும் 571 அச்சிடப்பட்ட பக்கங்களையும் உருவாக்குகிறது[2] .

மேற்கோள்கள்

[தொகு]
  1. Суд полностью оправдал ветерана ВОВ, обвинённого любимой внучкой в клевете
  2. "Наночастицы — принципиально новое на базе хорошо известного старого". Archived from the original on 2017-03-26. பார்க்கப்பட்ட நாள் 2020-04-30.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனடோலி_சிமோன்&oldid=3542152" இலிருந்து மீள்விக்கப்பட்டது